English    Tamil    Arabic

Result For

Aaron (see also Moses)

Messengership of

God's Messengers

[4:163] We have inspired you, as we inspired Noah and the prophets after him. And we inspired Abraham, Ismail, Isaac, Jacob, the Patriarchs, Jesus, Job, Jonah, Aaron, and Solomon. And we gave David the Psalms.

கடவுளுடைய தூதர்கள்

[4:163] நோவா மற்றும் அவருக்கு பின்னர் வந்த வேதம் வழங்கப்பட்டவர்களுக்கு நாம் உள்ளுணர்வு அளித்தது போலவே, உமக்கும் நாம் உள்ளுணர்வு அளித்திருக்கின்றோம் மேலும் ஆப்ரஹாம், இஸ்மாயில், ஐசக், ஜேக்கப், அந்தக் குலத்தலைவர்கள், இயேசு, ஜோப், ஜோனாஹ், ஆரோன் மற்றும் ஸாலமனுக்கும் நாம் உள்ளுணர்வு அளித்தோம் மேலும் டேவிட்டிற்கு நாம் சங்கீதத்தைக் கொடுத்தோம்

۞إِنَّآ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ كَمَآ أَوۡحَيۡنَآ إِلَىٰ نُوحٖ وَٱلنَّبِيِّـۧنَ مِنۢ بَعۡدِهِۦۚ وَأَوۡحَيۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَٰرُونَ وَسُلَيۡمَٰنَۚ وَءَاتَيۡنَا دَاوُۥدَ زَبُورٗا [4:163]

[6:84] And we granted him Isaac and Jacob, and we guided both of them. Similarly, we guided Noah before that, and from his descendants (we guided) David, Solomon, Job, Joseph, Moses, and Aaron. We thus reward the righteous.

[6:84] மேலும் நாம் அவருக்கு ஐசக் மற்றும் ஜேக்கப்பை அளித்தோம், மேலும் அவர்கள் இருவரையும் நாம் வழி நடத்தினோம் அதே போல் அதற்கு முன்னர் நோவாவை நாம் வழி நடத்தினோம், மேலும் அவருடைய சந்ததியரிலிருந்து டேவிட், ஸாலமன், ஜோப், ஜோஸஃப், மோஸஸ் மற்றும் ஆரோனையும் (நாம் வழி நடத்தினோம்) நாம் இவ்விதமாக நன்னெறியாளர்களுக்கு வெகுமதி அளிக்கின்றோம்

وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَۚ كُلًّا هَدَيۡنَاۚ وَنُوحًا هَدَيۡنَا مِن قَبۡلُۖ وَمِن ذُرِّيَّتِهِۦ دَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَىٰ وَهَٰرُونَۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ [6:84]

Moses and Aaron

[10:75] Then we sent after them Moses and Aaron to Pharaoh and his group, with our proofs. But they turned arrogant; and were transgressing people.

மோஸஸ் மற்றும் ஆரோன்

[10:75] அவர்களுக்குப் பின்னர் நாம் மோஸஸ் மற்றும் ஆரோனை நம்முடைய சான்றுகளுடன், ஃபேரோ மற்றும்அவனுடைய கூட்டத்தாரிடம் அனுப்பினோம் ஆனால் அவர்கள் ஆணவம் கொண்டவர்களாக மாறினார்கள்; மேலும் வரம்பு மீறுகின்ற மக்களாக இருந்தார்கள்

ثُمَّ بَعَثۡنَا مِنۢ بَعۡدِهِم مُّوسَىٰ وَهَٰرُونَ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ بِـَٔايَٰتِنَا فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمٗا مُّجۡرِمِينَ [10:75]

[10:76] When the truth came to them from us, they said, "This is obviously magic!"

[10:76] நம்மிடமிருந்து சத்தியம் அவர்களுக்கு வந்தபொழுது, அவர்கள், “இது வெளிப்படையான மாயாஜாலமாக இருக்கின்றது!” என்று கூறினார்கள்

فَلَمَّا جَآءَهُمُ ٱلۡحَقُّ مِنۡ عِندِنَا قَالُوٓاْ إِنَّ هَٰذَا لَسِحۡرٞ مُّبِينٞ [10:76]

[10:77] Moses said, "Is this how you describe the truth when it comes to you? Is this magic? How can any magicians prevail?"

[10:77] மோஸஸ், “சத்தியம் உங்களிடம் வருகின்ற பொழுது அதைப் பற்றி இப்படித்தான் நீங்கள் விவரிப்பீர்களா? இது மாயாஜாலமா? மந்திரவாதிகள் எவரும் எப்படி வெற்றி பெற இயலும்?” என்று கூறினார்

قَالَ مُوسَىٰٓ أَتَقُولُونَ لِلۡحَقِّ لَمَّا جَآءَكُمۡۖ أَسِحۡرٌ هَٰذَا وَلَا يُفۡلِحُ ٱلسَّٰحِرُونَ [10:77]

[10:78] They said, "Did you come to divert us from what we found our parents doing, and to attain positions of prominence for yourselves? We will never join you as believers."

[10:78] அவர்கள், “ நீங்கள் எங்களுடைய பெற்றோர்கள் செய்து கொண்டிருக்க நாங்கள் கண்டவற்றை விட்டும் எங்களை வேறுவழியில் திருப்புவதற்கும், மேலும் முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை நீங்களே அடைந்து கொள்வதற்கும் வந்தீர்களா? நம்பிக்கையாளர்களாக நாங்கள் ஒருபோதும் உங்களுடன் சேர்ந்து கொள்ள மாட்டோம்,” என்று கூறினார்கள்

قَالُوٓاْ أَجِئۡتَنَا لِتَلۡفِتَنَا عَمَّا وَجَدۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَا وَتَكُونَ لَكُمَا ٱلۡكِبۡرِيَآءُ فِي ٱلۡأَرۡضِ وَمَا نَحۡنُ لَكُمَا بِمُؤۡمِنِينَ [10:78]

The Truth Prevails

[10:79] Pharaoh said, "Bring to me every experienced magician."

சத்தியம் வெல்கின்றது

[10:79] ஃபேரோ, “அனுபவமிக்க மந்திரவாதிகள் ஒவ்வொருவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்,” என்று கூறினான்

وَقَالَ فِرۡعَوۡنُ ٱئۡتُونِي بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٖ [10:79]

[10:80] When the magicians came, Moses said to them, "Throw whatever you are going to throw."

[10:80] அந்த மந்திரவாதிகள் வந்தபொழுது, மோஸஸ் அவர்களிடம், “நீங்கள் எறியப்போவது எதுவானாலும் எறியுங்கள்,” என்று கூறினார் 

فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ [10:80]

[10:81] When they threw, Moses said, "What you have produced is magic, and GOD will make it fail. GOD does not support the transgressors' work."

[10:81] அவர்கள் எறிந்தபொழுது, மோஸஸ், “நீங்கள் உருவாக்கியிருக்கின்றது மாயாஜாலமாக இருக்கின்றது, மேலும் கடவுள் அதை தோல்வியடையச் செய்வார் வரம்பு மீறுகின்றவர்களுடைய காரியங்களுக்குக் கடவுள் ஆதரவளிப்பதில்லை,” என்று கூறினார்

فَلَمَّآ أَلۡقَوۡاْ قَالَ مُوسَىٰ مَا جِئۡتُم بِهِ ٱلسِّحۡرُۖ إِنَّ ٱللَّهَ سَيُبۡطِلُهُۥٓ إِنَّ ٱللَّهَ لَا يُصۡلِحُ عَمَلَ ٱلۡمُفۡسِدِينَ [10:81]

[10:82] GOD establishes the truth with His words, despite the criminals.

[10:82] குற்றவாளிகள் வெறுத்த போதிலும், கடவுள் தன்னுடைய வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நிறுத்துகின்றார்

وَيُحِقُّ ٱللَّهُ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُجۡرِمُونَ [10:82]

[10:83] None believed with Moses except a few of his people, while fearing the tyranny of Pharaoh and his elders. Surely, Pharaoh was much too arrogant on earth, and a real tyrant.

[10:83] ஃபேரோ மற்றும் அவனுடைய பிரதானிகளின் கொடுங்கோன்மைக்கு அஞ்சிக் கொண்டிருந்த சமயத்தில், மோஸஸுடன் அவருடைய சமூகத்தாரில் ஒரு சிலரைத் தவிர, எவரும் நம்பிக்கை கொள்ளவில்லை நிச்சயமாக, ஃபேரோ பூமியின் மீது மிகப்பெரும் ஆணவம் கொண்டவனாகவும், மேலும் உண்மையிலேயே ஒரு கொடுங்கோலனாகவும் இருந்தான்

فَمَآ ءَامَنَ لِمُوسَىٰٓ إِلَّا ذُرِّيَّةٞ مِّن قَوۡمِهِۦ عَلَىٰ خَوۡفٖ مِّن فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِمۡ أَن يَفۡتِنَهُمۡۚ وَإِنَّ فِرۡعَوۡنَ لَعَالٖ فِي ٱلۡأَرۡضِ وَإِنَّهُۥ لَمِنَ ٱلۡمُسۡرِفِينَ [10:83]

[10:84] Moses said, "O my people, if you have really believed in GOD, then put your trust in Him, if you are really submitters."

[10:84] மோஸஸ், “என்னுடைய சமூகத்தாரே, நீங்கள் உண்மையிலேயே கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள் என்றால், உண்மையிலேயே நீங்கள் அடிபணிந்தவர்களாக இருக்கின்றீர்கள் என்றால், அப்பொழுது அவர்மீதே உங்களுடைய உறுதியான நம்பிக்கையை வைப்பீர்களாக,” என்று கூறினார்

وَقَالَ مُوسَىٰ يَٰقَوۡمِ إِن كُنتُمۡ ءَامَنتُم بِٱللَّهِ فَعَلَيۡهِ تَوَكَّلُوٓاْ إِن كُنتُم مُّسۡلِمِينَ [10:84]

[10:85] They said, "We trust in GOD. Our Lord, save us from the persecution of these oppressive people.

[10:85] அவர்கள் கூறினார்கள், “நாங்கள் கடவுள் மீது உறுதியான நம்பிக்கை கொள்கின்றோம் எங்களுடைய இரட்சகரே, அடக்கு முறை செய்கின்ற இந்த மக்களின் துன்புறுத்தல்களில் இருந்து எங்களைக் காப்பாற்றுவீராக

فَقَالُواْ عَلَى ٱللَّهِ تَوَكَّلۡنَا رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ [10:85]

[10:86] "Deliver us, with Your mercy, from the disbelieving people."

[10:86] “நம்ப மறுத்துக் கொண்டிருக்கின்ற மக்களிடமிருந்து, உம்முடைய கருணையைக் கொண்டு, எங்களை விடுதலை செய்வீராக”

وَنَجِّنَا بِرَحۡمَتِكَ مِنَ ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ [10:86]

[10:87] We inspired Moses and his brother. "Maintain your homes in Egypt for the time being, turn your homes into synagogues, and maintain the Contact Prayers (Salat). Give good news to the believers."

[10:87] நாம் மோஸஸிற்கும் மேலும் அவருடைய சகோதரருக்கும், “தற்போதைக்கு எகிப்தில் உங்களுடைய வீடுகளைப்பராமரித்துக் கொள்வீர்களாக, உங்களுடைய வீடுகளையே வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிக் கொள்வீர்களாக, மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) தொடர்ந்து பராமரித்து வருவீர்களாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீர்களாக,” என்று உள்ளுணர்வு அளித்தோம்

وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَن تَبَوَّءَا لِقَوۡمِكُمَا بِمِصۡرَ بُيُوتٗا وَٱجۡعَلُواْ بُيُوتَكُمۡ قِبۡلَةٗ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ [10:87]

[19:53] And we granted him, out of our mercy, his brother Aaron as a prophet.

[19:53] மேலும் நம்முடைய கருணையின் வெளிப்பாடாக, அவருடைய சகோதரர் ஆரோனை ஒரு வேதம் வழங்கப்பட்டவராக, அவருக்கு நாம் வழங்கினோம்

وَوَهَبۡنَا لَهُۥ مِن رَّحۡمَتِنَآ أَخَاهُ هَٰرُونَ نَبِيّٗا [19:53]

Prophets Moses and Aaron

[21:48] We gave Moses and Aaron the Statute Book, a beacon, and a reminder for the righteous.

வேதம் வழங்கப்பட்டவர்களான மோஸஸ் மற்றும் ஆரோன்

[21:48] நாம் மோஸஸ் மற்றும் ஆரோனிற்கு சட்டப் புத்தகத்தைத் தந்தோம், ஒரு வழிகாட்டி, மேலும் நன்னெறியாளர்களுக்காக ஒரு நினைவூட்டல்

وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَىٰ وَهَٰرُونَ ٱلۡفُرۡقَانَ وَضِيَآءٗ وَذِكۡرٗا لِّلۡمُتَّقِينَ [21:48]

Moses and Aaron

[23:45] Then we sent Moses and his brother Aaron with our revelations and a profound proof.

மோஸஸ் மற்றும் ஆரோன்

[23:45] பின்னர் நம்முடைய வெளிப்பாடுகளுடனும் மேலும் ஆழ்ந்ததொரு சான்றுடனும் மோஸஸ் மற்றும் அவருடைய சகோதரர் ஆரோனை நாம் அனுப்பினோம்

ثُمَّ أَرۡسَلۡنَا مُوسَىٰ وَأَخَاهُ هَٰرُونَ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ [23:45]

[25:35] We have given Moses the scripture, and appointed his brother Aaron to be his assistant.

[25:35] நாம் மோஸஸிற்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றோம், மேலும் அவருடைய உதவியாளராக இருப்பதற்கு அவருடைய சகோதரர் ஆரோனை நியமித்தோம்

وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَجَعَلۡنَا مَعَهُۥٓ أَخَاهُ هَٰرُونَ وَزِيرٗا [25:35]

[28:34] "Also, my brother Aaron is more eloquent than I. Send him with me as a helper to confirm and strengthen me. I fear lest they disbelieve me."

[28:34] “தவிர, என்னைக் காட்டிலும் என்னுடைய சகோதரர் ஆரோன் பேச்சுத்திறன் அதிகம் உடையவராக இருக்கின்றார் என்னை உறுதிப்படுத்தவும் மேலும் பலப்படுத்தவும் ஓர் உதவியாளராக அவரை என்னுடன் அனுப்புவீராக அவர்கள் என்னை நம்ப மறுத்துவிடக்கூடும் என்று நான் அஞ்சுகின்றேன்”

وَأَخِي هَٰرُونُ هُوَ أَفۡصَحُ مِنِّي لِسَانٗا فَأَرۡسِلۡهُ مَعِيَ رِدۡءٗا يُصَدِّقُنِيٓۖ إِنِّيٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ [28:34]

[28:35] He said, "We will strengthen you with your brother, and we will provide you both with manifest authority. Thus, they will not be able to touch either one of you. With our miracles, the two of you, together with those who follow you, will be the victors."

[28:35] அவர், “உம்முடைய சகோதரரைக் கொண்டு உம்மை நாம் பலப்படுத்துவோம், மேலும் உங்கள் இருவருக்கும் தெளிவான அதிகாரத்தைக் கொண்டு நாம் வழங்குவோம் இவ்விதமாக, உங்கள் இருவரில் எவர் ஒருவரையும் அவர்களால் தொட இயலாது நம்முடைய அற்புதங்களுடன், நீங்கள் இருவரும், எவர்கள் உங்களைப் பின்பற்றுகின்றார்களோ அவர்களுடன் சேர்ந்து, வெற்றியாளர்களாக இருப்பீர்கள்,” என்று கூறினார்

قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِأَخِيكَ وَنَجۡعَلُ لَكُمَا سُلۡطَٰنٗا فَلَا يَصِلُونَ إِلَيۡكُمَا بِـَٔايَٰتِنَآۚ أَنتُمَا وَمَنِ ٱتَّبَعَكُمَا ٱلۡغَٰلِبُونَ [28:35]

Moses and Aaron

[37:114] We also blessed Moses and Aaron.

மோஸஸ் மற்றும் ஆரோன்

[37:114] அத்துடன் மோஸஸ் மற்றும் ஆரோனை நாம் அருள்பாலித்தோம்

وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ [37:114]

[37:115] We delivered them and their people from the great disaster.

[37:115] அவர்களையும் மற்றும் அவர்களுடைய சமூகத்தாரையும் பெரும் பேரழிவிலிருந்து நாம் காப்பாற்றினோம்

وَنَجَّيۡنَٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ [37:115]

[37:116] We supported them, until they became the winners.

[37:116] அவர்கள் வெற்றியாளர்களாக ஆகின்றவரை, அவர்களுக்கு நாம் ஆதரவளித்தோம்

وَنَصَرۡنَٰهُمۡ فَكَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ [37:116]

[37:117] We gave both of them the profound scripture.

[37:117] ஆழ்ந்த வேதத்தை அவர்கள் இருவருக்கும் நாம் கொடுத்தோம்

وَءَاتَيۡنَٰهُمَا ٱلۡكِتَٰبَ ٱلۡمُسۡتَبِينَ [37:117]

[37:118] We guided them in the right path.

[37:118] சரியான பாதையின் மீது அவர்களை நாம் வழிநடத்தினோம்

وَهَدَيۡنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ [37:118]

[37:119] We preserved their history for subsequent generations.

[37:119] பின்வருகின்ற தலைமுறைகளுக்காக அவர்களுடைய சரித்திரத்தை நாம் பாதுகாத்தோம்

وَتَرَكۡنَا عَلَيۡهِمَا فِي ٱلۡأٓخِرِينَ [37:119]

[37:120] Peace be upon Moses and Aaron.

[37:120] மோஸஸ் மற்றும் ஆரோன் மீது அமைதி ஏற்படுவதாக

سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ [37:120]

[37:121] We thus reward the righteous.

[37:121] இவ்விதமாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ [37:121]

[37:122] Both of them were among our righteous servants.

[37:122] நன்னெறியாளர்களான நம்முடைய அடியார்களுக்கிடையில் அவர்கள் இருவரும் இருந்தார்கள்

إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ [37:122]

Quran The Final Testament 2010 - 2019 © ICS Chennai . All rights reserved